‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 16 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு….
27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
மேஷம்
மேஷராசி அன்பர்களே!
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களி லும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுச ரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு உகந்த நாள். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
கடகம்
கடகராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர் கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது.
சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோ சனை கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மனக்குறைகள் நீங்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கன்னி
கன்னிராசி அன்பர்களே!
தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பணஉதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரி களின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். திருப்பதி வேங்கடேச பெருமாளை தியானிப்பதால் நல்ல திருப்பம் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
துலாம்
துலாராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண் டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!
தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைப் பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவை யற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட மன அமைதி உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு
தனுசுராசி அன்பர்களே!
இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அவர்கள் போக்கில் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது. ஆறுமுகக் கடவுளை வழிபட அனைத்தும் நன்மையில் முடியும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகரம்
மகரராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் மிகவும் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். ஷீர்டி சாயிபாபாவை தியானித்து இன்னல்களைப் போக்கிக்கொள்ளலாம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
கும்பம்
கும்பராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உற வினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய டிசைனில் நவீனரக ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சித்தர்களை வழிபட சிந்தனை தெளிவாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
மீனம்
மீனராசி அன்பர்களே!
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்த னையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவல கத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு மனக் குழப்பங்களைப் போக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.