கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தை அல்லது கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
எனவே அதுபோன்ற ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இந்தக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று கரு ஜெயசூரிய கேட்டுள்ளார்.
பணக்கார நாடுகளே இந்த கொரோனா வைரஸ் விடயத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றன, இந்தநிலையில் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும் அச்சம் உள்ளது.
எனவே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மக்களுக்கு அச்சமேற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஜெயசூரிய கோரியுள்ளார்.