சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளார். மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மட்டும் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2,353 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சியில் சுவிஸ் அரசாங்கம் ஏப்ரல் 19 வரை அவசரகால நிலையை நீடிப்பதாக அறிவித்துள்ளது.
அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் நள்ளிரவு முதல் அரசாங்கம் தடைசெய்ததுடன், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை “விதிவிலக்கான” அவசரநிலை என்று அறிவித்த பின்னர் 8,000 இராணுவ உறுப்பினர்களை வைத்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுள்ளது.