அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் பீ.வி. குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாப்பற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.