கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டவர்கள் உள்நுழைவதற்கு ரஷ்ய அரசாங்கம் தற்காலிக தடைவிதித்துள்ளது.
இந்த தடை புதன் கிழமை முதல் மே ஒன்று வரை நடைமுறையில் இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்டைய மாநிலங்களுக்கு விளக்கமளிக்கு வகையில் ரஷ்ய பிரதமர் நேற்றும், இன்றும் தொடர்ச்சியாக தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்க, சிறப்பு சூழ்நிலைகளின் விளைவாகும் எனவும் அவை முற்றிலும் தற்காலிகமானவை எனவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்நடவடிக்கையிலிருந்து இராஜதந்திரிகள் மற்றும் ரஷ்யாவில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச லாரி சாரதிகள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் 16 மாலை நிலவரப்படி, உலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 174,000 ஐ தாண்டியுள்ளது.
ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 93 பேரை எட்டியது, இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.