நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனியே களமிறங்கத் தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் கான்கிரஸை தமது கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
எனினும், இறுதிவரை அதற்குத் மறுப்புத் தெரிவித்த ரிஷாத் தரப்பு, அம்பாறையில் தற்போது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.