பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கௌரவத்துடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வலியுறுத்தலை வனவாசம் செய்து வரும் மற்றும் நாமல் பூங்கா ஸ்தாபகரான பிரபல பிக்கு ராகுல தேரர் விடுத்துள்ளார்.
ஒருவேளை அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ செய்யாத பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் ஏற்படும் என்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.