சீனா கொவிட் -19 நோய்த்தொற்றின் மற்றொரு தாக்கத்தை அனுபவிக்கக்கூடும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மற்றும் உலகளாவிய மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீன மாகாணமான ஹூபேயில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 2,00,000 பேரை பாதித்து கிட்டத்தட்ட 8,000 பேரைக் கொன்றது.
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து கனிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் உள்ள மக்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், சீனா கொவிட்-19 நோய்த்தொற்றின் மற்றொரு தாக்கத்தை அனுபவிக்கக்கூடும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மற்றும் உலகளாவிய மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக சுகாதார அமைப்பின் குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.