மண்டூர் 13 ஆம் கிராமத்தைச் சேர்நத 15 வயது பாடசாலை மாணவி தெய்வேந்திரன் ஜதுர்ஜா வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்றுள்ளார்.
கல்வியிலும், ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் திறமையுள்ளவர் கடந்த மாதம் இவர் வயிற்று வலியால் கடும் சுகவீனமுற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றநோய் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (17 மாலை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஜதுர்ஜாவின் உயிரிழப்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதிக்கிரியைகள் இன்று(18) புதன்கிழமை மண்டூர் சங்கர்புரத்தில் இடம்பெற்றது.