பிரான்சில் சரியான காரணமின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது 4000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரான்ஸ் அரசு புதியகட்டுப்பாடுகள் மற்றும் புதிய கோரிக்கைகளை அறிவித்தது.
அதாவது, ஆவணங்கள் இன்றி வெளியில் செல்வோருக்கும், போதிய காரணங்கள் இன்றி பயணிப்போருக்கும், அல்லது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கூட்டமாக செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Plain clothes cops fan out along my street in Paris stopping everyone to check if they have the required document to go out. #COVID19 #coronavirus pic.twitter.com/ATNzeZiDOm
— Rory Mulholland (@mulhollandrory) March 18, 2020
இந்நிலையில், கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி 4000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Christophe Castaner கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இந்த அபராதம் கடந்த 17-ஆம் திகதி 35 யூரோவாக இருந்தது, நேற்று 135 யூரோவாக உள்ளது, இது 375 யூரோ வரை செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு விதித்த கட்டுப்பாடுகளை 4,095 பேர் மீறியுள்ளதாகவும், இது மக்கள் கூடுவதை தடுப்பதற்கான ஒரு காரணியாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எங்கள் நோக்கம் பிரான்ஸ் மக்களை பாதுகாப்பது தான், உயிரைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி அவர்கள் வீட்டில் தங்குவது தான், தேவைப்பட்டால் நாங்கள் கடுமையானவர்களாக இருப்போம் என்றும் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் இதுவரை 9,134 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 264 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.