நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலைக்கு காரணமானவர்கள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தபோது பரிசோதனைகள் இன்றி வீடுகளுக்கு செல்ல வேண்டும் என விமான நிலையத்தில் வைத்து பிரச்சினையை ஏற்படுத்தியவர்களும், தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களில் இருந்து தப்பியோடியவர்களுமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர்கள் துரோகிகளாகவே கருதப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் கருத்துரைத்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வேறு நாடுகளில் இலங்கையை போன்று கொரோனா வைரஸூக்கு எதிரான சிகிச்சைககள் மேற்கொள்ளப்படவில்லை.
சில நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


















