கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜேர்மணி முழுவதும் முடக்கப்படும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் முக்கிய மாநிலங்கல் பல இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67 என அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 கடந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 4,528 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஜேர்மனி முழுவதும் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ஜேர்மனியின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பவேரியா அடிப்படையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல், மக்கள் வேலைக்குச் செல்வது அல்லது மருத்துவரை சந்திக்க செல்வது, மளிகைப் பொருட்கள் அல்லது மருந்து வாங்குவது போன்ற தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த கட்டுப்பாடுகளானது ஆரம்ப இரண்டு வார காலத்திற்கு மட்டும் பொருந்தும் எனவும், அதன் பின்னர் மாநில நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவலை எதிர்கொள்ள முடக்கப்படும் முதல் ஜேர்மானிய மாநிலம் பவேரியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறும் குடிமக்களுக்கு 25,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநிலம் நிர்வாகம் அறிவித்துள்ளது..
இதேப்போன்று ஜேர்மனியின் குட்டி மாநிலமான Saarland அனைத்து உணவகங்களையும் மூடியுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டு வருகிறது.
பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தை எல்லையாக கொண்ட Baden-Württemberg மாநிலமானது மூன்று பேருக்கு மேல் கூடுவதை தடை விதித்துள்ளது.
மேலும் உணவகங்களையும் மூடியுள்ளது. மேலும் பயணிகள் வேலைக்காக எல்லையை கடக்க அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள மாநில நிர்வாகம்,
அவர்கள் எல்லையைத் தாண்டி ஷாப்பிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
இதேப்போன்று Hesse, Rhineland-Palatinate, Lower Saxony,Hamburg உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்துள்ளது.