பண்டாரவளை பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹப்புத்தளை பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் விற்பனை நிலையத்தை திறந்து வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.