நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்பிகாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆசனம் வழங்கியுள்ளதாக கட்சிற்குள் குழப்பங்களை உருவாக்கி வரும் தமிழரசுக்கட்சின் கொழும்புக் கிளையின் உப தலைவர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் அந்த ஆசனம் தனக்கு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து சுமத்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இன்றைய தினம் கூட்டமைப்பின் தலைவரை இரா.சம்மந்தனை தமிழரசுக்கட்சின் கொழும்புக் கிளையின் உப தலைவர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்.சந்தித்துபேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன் போது இரா.சம்மந்தன் அம்பிகா சற்குணநாதனை மனித உரிமைகள் மற்றும் சட்டத்துறையில் சிறந்துவிளங்குவதால் கூட்டமைப்பில் ஆசனம் வழங்கியதாக மேலும் தெரிவித்துள்ளார்