ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்… 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர்தான் நந்தின்.. கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ராமதாஸ் பெங்களூர், நந்தினி கோயம்புத்தூர்.. ஃபேஸ்புக்கில்தான் காதல் மலர்ந்தது.. வீட்டில் காதல் விவகாரம் தெரிந்தது.. ஆனால் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதனால் ராமதாஸ், வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்ய முடிவு செய்தார்.. முன்னதாக தன்னுடைய சகோதரிகளுக்கு போன் செய்து, தாங்கள் 2 பேரும் ஆம்பூர் அருகே உள்ள ஊட்டல் காட்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் கல்யாணம் செய்துகொள்ள போவதாக சொன்னார்.. இதை கேட்டதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இதனால் ராமதாஸ் மனம் உடைந்துவிட்டார்.. அதனால் ஏற்கனவே முடிவு செய்த கோயிலில் 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டனர்… என்ன நடந்ததோ தெரியவில்லை.. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு ராமதாஸ் வந்தார்… இதை நந்தினியிடம் சொல்ல, அவரும் அதற்கு சரி என்று சொன்னார்.
பின்னர் ஆம்பூர் அடுத்துள்ள வீரவர் கோயில் பகுதியில் உள்ள ரெயில்வே ஸ்டேஷனுக்கு காதலர்கள் வந்தனர்.. சென்னை பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருவரும் படுத்துக்கொண்டனர்.. இருவரும் அப்படியே ஒரு செல்பியை எடுத்து கொண்டனர்.. பிறகு அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரும் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்த ரயில்வே போலீசார் இரு சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்… துரித விசாரணையும் மேற்கொண்டனர். இவர்கள் சடலம் அருகில் கிடந்த செல்போனை வைத்துதான், அந்த கடைசி செல்பியை பொலிசார் கண்டுபிடித்தனர்.
அப்போதுதான் நந்தினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம்.. ஒரு வருஷத்துக்கு முன்பு பச்சூர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடன் கல்யாணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்களாம்.. இதனால்தான் ராமதாஸ் வீட்டில் திருமணத்தை ஏற்கவில்லை என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
எனினும் கல்யாணம் செய்து கொண்ட அடுத்த நாளே இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மை காரணம் தெரியவில்லை.. எதற்காக செல்பி எடுத்துகொண்டனர் என்பதும் விளங்கவில்லை.. இது முழு விசாரணை நடந்து வருகிறது.. காதலர்கள் எடுத்து கொண்ட அந்த கடைசி செல்பி வைரலாகி வருகிறது.