இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ், கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தைப் கூற வீடியோவை வெளியிட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவல் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் சுத்தமான கைகளின் சக்தியை மேம்படுத்துவதற்காக ‘Safehands’ சவாலை அறிமுகப்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பு, தனிமனிதரை இந்தச் சவாலை ஏற்று, கைகளைக் கழுவும் வீடியோவைப் பகிரும்படி கேட்டுக்கொண்டது. பல பிரபலங்கள் இந்தச் சவாலை ஏற்று வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#keepyourhandscleenchallange @covid19 @WHO @OfficialSLC pic.twitter.com/Qk9ijPHpev
— Kusal Mendis (@kusalmendis1) March 19, 2020
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ், அவர் கைகளை கழுவும் வீடியோவை வெளியிட்டார்.
மேலும் கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தைப் பரப்புவதற்கு முன்முயற்சி எடுத்ததற்காகப் பாராட்டப்பட்டார். இருப்பினும், ஒரு சில ட்விட்டர் பயனர்கள், இலங்கை கிரிக்கெட் வீரர் தனது கைகளில் சோப்பைப் பயன்படுத்தும்போது, குழாய் திறந்து வைத்திருப்பதைக் கவனித்தனர்.
இதையடுத்து குசல் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்றும், கைகளுக்கு சோப் பயன்படுத்தும்போது குழாய் மூட வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியதோடு, அறிவுரையும் வழங்கினார்கள்.