பொலிஸ் ஊரடங்கு நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டது. கல்முனை-நிந்தவூர் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
மக்களுக்கு ஊரடங்கு தொடர்பாக பல தடவை அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் சட்டத்தை மீறி பயணித்தமை, நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியமை போன்ற குற்றங்களில் குறித்த இளைஞர்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.