இளைஞர்கள் கொரோனா வைரஸால் பாதிக்காத வகையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜெனீவாவில் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், கொரோனாவால் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இளம் வயதினரையும் வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இளம் வயதினர் கொரோனாவை வெல்ல முடியாது, இந்த வைரஸ் பாதிப்பால் நீங்கள் பல வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்க கூட நேரிடும்.
உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படாவிட்டாலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முடிவால் வேறு யாருக்கோ வாழ்வா, சாவா என்ற நிலையாகிவிடும்.
சீனாவில் வுஹான் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், இதன் மூலம் மிகக் கடுமையாக சூழ்நிலையிலிந்தும் மீண்டு வர முடியும் என்று உலகின் பிற பகுதிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது என டெட்ரோஸ் கூறியுள்ளார்.