உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகிறன.
மருந்து தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளன. விரைவில் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு விடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த ரஷ்யாவை சேர்ந்த உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தடுப்பு மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் மருந்தினை தயாரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸை அழிக்கக் கூடிய மருந்துகள் என்று இரண்டு மருந்துகளின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இரண்டு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் வைத்தியதுறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்தில், இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையை பாராட்டியுள்ளார்.
மேலும், மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 160 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.