அரசாங்கத்தின் அறிவிப்பிற்கேற்ப ஊடரங்கு சட்டம் தகர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்காமலிருக்குமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரம் வைத்திருந்தாலும் மதுவரித்திணைக்களத்தின் தீர்மானத்தையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச போதரகம தெரிவித்துள்ளார்.
ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டால் அவை தொடர்ரில் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.