உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மலேஷிய நாட்டிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த திங்கள்கிழமை முதல் மலேசிய நாட்டில் இந்த தடை அமலான நிலையில், காவல் துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழர்கள் வசித்து வரும் பகுதிக்கு சென்ற காவல் துறையினர், தமிழ் மொழியில் மக்கள் வீட்டில் இருக்க கூறி கூறியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மலேசியா போலீஸ் தமிழில் கொறோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்தபோது
Publiée par Jayam Rajesh sur Jeudi 19 mars 2020
இது தொடர்பான வீடியோ காட்சியில், பொதுமக்களின் அன்பான கவனத்திற்கு, கரோனா வைரஸின் தாக்கத்தால், நச்சுறுதி தடுப்பு சட்டத்தின் கீழ் பொதுமக்கள் வீட்டில் இருக்க அறிவுரை செய்யப்படுகிறார்கள். இது மார்ச் 18 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த சட்டத்திற்கு பின்பற்றாமல் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதம் தண்டனை விதிக்கப்படும். இதனால் மக்கள் வீடுகளில் இருப்பது நல்லது என்று கூறியுள்ளனர்.