நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் உலக நாடுகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் 389 பேர் பலி இதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து வாஷிங்டனில் 94 பேரும் கலிபோர்னியாவில் 28 பேரும் மாண்டுபோயுள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரான்ஸ்
பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலி பிரான்சிலும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் அதிகரித்து வருகிறது. பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலியான நிலையில் இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 674 ஆக அதிகரித்திருக்கிறது. பிரான்ஸில் மொத்தம் 16,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துருக்கி
துருக்கியில் 30 பேர் பலி துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவருமே முதியவர்கள் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். துருக்கியில் கடந்த 24 மணிநேரத்தில் 289 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டிருக்கிறது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000.
செளதி
செளதியில் 119 பேர் பாதிப்பு செளதியில் கொரோனாவால் மேலும் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செளதியில் இதுவரை கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பஹ்ரைன்
பஹ்ரைனில் கொரோனாவின் தாக்குதலுக்கு 2வதாக நேற்று ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
ஜெர்மனி
ஜெர்மனியில் கொரோனாவை தடுக்கும் வகையில் 2 பேருக்கு மேல் சந்திப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது.
கனடா
கனடாவில் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் முதலாவதாக நேற்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்.
இலங்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட 8 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15 வைத்தியசாலைகளில் 222 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.