இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இனங்காணப்பட்ட முதலாவது இலங்கைப் பிரஜை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் பூரண குண்மடைந்ததை அடுத்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள்ளார்.
கொழும்பு புறநகரான கொட்டாவ – மத்தேகொடயைச் சேர்ந்த இவர் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக தொழில் புரிந்து வருகின்றார்.
இந் நிலையில் கடந்த 11ஆம் திகதி கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வந்த பயணிகளுக்கே இவர் வழங்கழிகாட்டியாக இருந்து நிலையில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருந்தார்.
இதேவேளை இவரது சாரதியாக தொழில்புரிந்தவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றபோதும் அவர் தொடர்பான விவரம் இதுவரை வெளிவரவில்லை.