கொரோனா வைரஸ் பரவுவதை அரசாங்கம் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பரிலேயே கொரோனா வைரஸ் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை முன்னேற்பாடாக தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை இத்தாலியும் இதேபோல முன்னேற்பாடுகளை செய்யாததினால்தான் தற்போது அதன் பின்விளைவுகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருவதாக ரணில் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.