லண்டன் அரண்மனை ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அரண்மனையை விட்டு மகாராணி எலிசெபத் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233-ஆக உள்ளது.
இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மகாராணி எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி வின்ட்சர் கோட்டைக்குச் சென்று தங்கியுள்ளார்.
இதன் காரணமாக, அவரின் அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி சன் வெளியிட்டுள்ள செய்தியில், ராணி வின்ட்சர் கோட்டைக்குச் செல்வதற்கு முன்னால் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் சுமார் 500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் தொற்று பரவல் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும்,இதுகுறித்து அரண்மனை நிர்வாகம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. அரண்மனையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.