அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியாவுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவலை டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்ட நிலையில் அதே நாளில் மெலானியாவும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்.
அதாவது இருவரும் கடந்த 13ஆம் திகதி பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மனைவிக்கும் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.