இந்தியாவில், கொரோனா அச்சுறுத்தல் கிடுகிடுவென உயர்ந்துவரும் நிலையில், அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 492 என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 451பேர் இந்தியர்கள் என்றும் 41பேர் வெளிநாட்டினர் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் வேகமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கேரள மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் நிலமை மேசமடைந்துள்ளதால்,மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் 12பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இன்று மாலை 6மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, டெல்லி, ஜெம்மு-காஷ்மீர், கர்நாடக, குஜராத், மகாராஷ்ரா, ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும், ஒருமாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.