உலகில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அந்நாட்டில் இயங்கும் கோரசன் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோரசன் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது
ஈரானில் கோவிட் காய்ச்சலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பலியாகினர். இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,932 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 24,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 பேர் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் 65 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகமாக கொரோனா வைரஸால் இறப்பைச் சந்திக்கிறார்கள் என்று ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.