கொரோனா எனப்படும் கொவிட்-19 தொற்று நாட்டில் வேகமாக பரவும் சூழலில், தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடங்கலின்றி தமது விநியோக சேவையை முன்னெடுப்பதற்கு தயார் நிலையிலுள்ளதாக பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பிறீமா சிலோன் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி மேலும் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழ்நிலை எழுந்தாலும், தனது வீதி, புகையிரத வழி மற்றும் கடல் மார்க்கங்களில் அரசாங்கத்தின் ஆதரவுடன், மா விநியோகத்தை மேற்கொள்ளும் ஆற்றலை பிறீமா கொண்டுள்ளது.
இதனூடாக நாட்டின் மக்களுக்கு கோதுமை மா விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வது உறுதி செய்யப்படும் என்பதுடன், பாண் மற்றும் இதர வெதுப்பக தயாரிப்புகளில் ஈடுபடும் வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தமது உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எனவே, இந்த நெருக்கடியான காலத்தில் நாட்டிற்குள் கோதுமை மாவுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படாது.
மேலும், தேசிய நுகர்வுக்கு 3 மாதங்களுக்கு போதுமானளவு முழுக் கோதுமையையும் நிறுவனம் பேணுகின்றது. சகல பிறீமா அலுவலகங்களிலும் உற்பத்தி பகுதிகளிலும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு அவசியமான சகல முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பை பிறீமா சிலோன் லிமிடெட் மீள உறுதி செய்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு தினசரி நுகர்வுக்கு போதியளவு கோதுமை மா விநியோகத்தை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கத்துக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.