கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) தளர்த்தபட்டபோது மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இதன்படி, புஸ்ஸல்லாவ நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவுகளிலும் வங்கி நடவடிக்கைகளிலும் எரிபொருள் நிரப்புதல் உட்பட அன்றாட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இருந்தும் கொரோனா வைரஸ் பரவல் நடவடிக்கைகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பின்பற்றபட்டுவரும் ஒரு மீற்றருக்கு அப்பால் நிற்க வேண்டும் என்ற கட்டாய செயற்பாடு இங்கு நடைமுறைபடுத்தவில்லை.
கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகவே பொருட்களைக் கொள்வனவு செய்தனர். இவ்வாறு, மக்கள் பல பகுதிகளில் பொருட் கொள்வனவின்போது முண்டியடித்துக் கொண்டது அங்கிருந்த கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து தெரியவருகிறது.