கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை 475 லிருந்து 578 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரையில் 11,568 பேர் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
லண்டன் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் தீவிரத்தினால் “சுனாமியை” எதிர்கொண்டு வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அப்பாலும் இதன் தாக்கம் ஆரம்பித்துள்ளது என்று லண்டன் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அங்குள்ள அதிகாரிகள் நிலை தடுமாறியுள்ளதாக கூறப்படுகிறது.