இத்தாலியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 101வயது முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இத்தாலியின் கடலோர பகுதியான ரிமினியை சேர்ந்தவரே காப்பாற்றப்பட்டுள்ளார். MR.P என்று மட்டும் குறிப்பிடப்பட்ட அந்த நபர் தான் அதிகம் வயது கொண்டவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதல் நபர் என்று Xinhua news agency குறிப்பிட்டுள்ளது.
ரிமினியின் துணை மேயர் குளோரியா லிசி இது குறித்து கூறுகையில், “MR.P 1991-ல் பிறந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று அறுகுறி இருந்த நிலையில், ஓஸ்பெடேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் குணமடைந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. 100 வயதுக்கு மேல் உடைய MR.P காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
அவரை, குடும்பத்தினர் வீடிற்கு அழைத்து சென்றுவிட்டனர். இது அனைவருக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில், கொரோனா தொற்றால் 80,589 பாதிக்கப்பட்டுள்ள நிலையல், 8,215பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















