தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடக தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை (27) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.