பிரித்தானியாவில் இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியரான 86 வயது ஷீலா ப்ரூக்ஸ் என்பவர் கடந்த மாதம் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட இவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷீலா ப்ரூக்ஸ் என்பவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட உறவினர் 65 வயது சூசன் நெல்சன் திடீரென்று கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இவரையடுத்து தற்போது 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும், இறுதிச்சடங்கு நடந்த பின்னரே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி அந்த குடும்பத்தில் உள்ள 21 வயது நபர் முதல் 88 வயது முதியவர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 9 ஆம் திகதி மரணமடைந்த ஷீலா ப்ரூக்ஸ்-ன் இறுதிச்சடங்கானது மார்ச் 13 ஆம் திகதி முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து சூசன் நெல்சன் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அரசின் கட்டுப்பாடுகளால் சூசனுக்கு இறுதிச்சடங்களை முன்னெடுக்க முடியாமல் குடும்பத்தார் உள்ளனர்.