யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் மட்டுமல்லாமல் பெற்றவர்களும் தமது பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிளைகளை திருமணம் செய்வதனை இலட்சியமாக கொண்டிருக்கின்றனர்.
சில பெண்கள் சிறுவயது முதல் இதற்காக அழகு நிலையங்கள் ஆங்கிலம் சமையல் கேக் ஐசிங் என தயாராகி நண்பர்களால் ”வெளிநாட்டு பாசல்” என கிண்டலடிக்கப்படுவதை கண்டிருப்பீர்கள்.
காரணம் வெளிநாடுகளில் காணப்படும் ஆடம்பர வாழ்க்கை பற்றிய கனவுகள்.
அத்துடன் சீதனம் என்ற பெயரில் உள்ளூரில் நிலம் உள்நாட்டு மருமகனுக்கு கொடுப்பதை போல வெளிநாட்டு மாப்பிள்ளைகள் கேட்பது குறைவு என்பதும் ஒரு காரணம்.
ஓய்வு காலத்தில் பெற்றோர்களுக்கு மாதாந்த செலவு, உறவினர்களுக்கு இலத்திரனியல் பரிசு பொருட்கள், நகைகள் ஆடைகள் என வெளிநாட்டிலிருந்து இங்குள்ளவர்களுக்கு வந்து கொண்டிருப்பதால் தங்கள் பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க பலரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக கொத்துக்கொத்தாக பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்களின் மரணங்களை செய்திகள் ஊடாக அறியும் மணமகள்களின் பெற்றொர்கள் இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நிறுத்தி வருகின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளுக்கு 4 நாட்கள் முன்னதாக அழைப்பிதழ் கொடுத்து பந்தல் போட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டபின்னர் அத்திருமணம் நிறுத்தப்பட்டது.
இதற்காக வைரஸ் இலங்கைக்கு வர முன்னரே மணமகன் இலங்கை வந்து காத்திருந்துள்ளார்.
எனினும் எங்கள் மகள் வசதியாக வாழாவிட்டாலும் பரவாயில்லை உயிரோடு வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு பெற்றோரும், பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெற்றோர்களின் கூட இருப்பதே வரம் என்ற முடிவுக்கு பிள்ளைகளும் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.