கொரோனா வைரஸ் தொடர்பில் அனைத்து ஊடரங்கு சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானங்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் பிராந்திய ரீதியில் இது தொடர்பாக எவையும் மேற்கொள்ளப்படாது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இன்றும் 132 பேர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தியத்தலாவையில் இருந்து 76 பேரும் புனானையில் இருந்து 56பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் 2096 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.