வடக்கு ஜேர்மனியில் முதியவர் காப்பகம் ஒன்றில் மொத்தமாக 17 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் Wolfsburg பகுதியில் அமைந்துள்ள முதியவர் காப்பகத்தில் சனிக்கிழமை மட்டும் 12 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
மேலும் கடந்த 48 மணி நேரத்தில் அதே காப்பகத்தில் உள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
Wolfsburg பகுதியில் மட்டும் கொரோனாவால் இதுவரை 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு கொரோனாவுக்கு இலக்காகியுள்ள பெரும்பாலானோர் முதியவர்கள் என கூறப்படுகிறது. 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேட்டையாடி வருகிறது.
ஸ்பானிய ராணுவத்தினர் Wolfsburg பகுதியில் உதவிக்கு வந்த நிலையிலேயே முதியவர் காப்பகத்தில் 17 பேர் மரணமடைந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இருப்பினும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
பல ஐரோப்பிய நாடுக்ளிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஜேர்மனியில் 560 என பதிவாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கருத்துப்படி, ஜேர்மனி இப்போது ஒரு வாரத்திற்கு 500,000 பேரை கொரோனா வைரஸுக்கு பரிசோதித்து வருகிறது.
இதற்கு நேர்மாறாக, ஜனவரி மாத இறுதியில் இருந்து முழு காலகட்டத்திலும் இங்கிலாந்து வெறும் 134,946 சோதனைகளை மட்டுமே நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.