கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவாக வெளிஉலகுக்கு அறிவிக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 781,485 என சமீபத்திய கணக்குகள் தெரிவிக்க,
ஆனால் உண்மையில் இதுவல்ல என ஆணித்தரமாக மறுக்கிறார் தொற்றுநோய் பரவல் மற்றும் கணித பகுப்பாய்வில் நிபுணராக திகழக்கூடிய Adam Kucharski.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால்,
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், சராசரியாக இந்த வைரசை எத்தனை பேருக்கு கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழும்.
2 அல்லது 3 நபர்களுக்கு அவர்களால் கொடுக்க முடியும். நேர அளவீடுகளைப்பற்றியும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியதிருக்கிறது.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறபோது, அதற்கான அறிகுறிகளை அவர் காண்பிக்க சராசரியாக எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்றால் 5 நாட்களாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கலாம்.
மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால்,
அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.
இதனால் யார், யாருக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது மிகக் கடினமானதாகி விடுகிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில தோராய மதிப்பீடுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று கருதுவதாக Adam Kucharski தெரிவித்துள்ளார்.