கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய இக்கட்டான் சூழல் முற்றாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கணித்து உள்ளார்.
குறிப்பாக இத்தாலியும் அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த போதிலும், விஞ்ஞானி மைக்கேல் லெவிட் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
கொரோனாவால் உலகம் முழுவதும் 736,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலி மற்றும் நியூயார்க் நகரில் மட்டும் 157,000 பேர் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
நியூயார்க நகரில் மட்டும் சுமார் 59,513 பேர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த சீனாவில் 81,439 பேர் மட்டுமே கொரோனாவுக்கு இலக்காகினர்.
இத்தாலி (97,689), ஜேர்மனி (62,457), மற்றும் ஸ்பெயின் (85,195) உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமது கணிப்புகளின் படி இத்தாலி தற்போது மீண்டு வருவதாகவும், கடந்த 10 நாட்களில் அது வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் சீனாவின் கொரோனா பரவல் தொடர்பில் பேசிய மைக்கேல் லெவிட், அங்கு கொரோனாவால் 3,250 பேர் வரை மரணமடையலாம் எனவும் சுமார் 80,000 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கணித்திருந்தார்.
அவரது கணிப்பு நிஜாமான நிலையில், தற்போது இத்தாலி மறும் நியூயார்க் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கணிப்புகள் தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.