கொரோனா தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலில் இருந்து வந்த பிரித்தானிய இளவரசர் சார்லஸ், குணமடைந்து வருவதாகவும் அதனால் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் சார்லஸின் வயதை கருத்தில் கொண்டு, அவர் ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கணிக்கப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இளவரசர் சார்லஸ் லேசான அறிகுறிகளுடனே காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டத்து இளவரசரான சார்லஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடியதாக கடந்த 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, இளவரசர் சார்லஸ் 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இளவரசர் சார்லஸ் ஆபத்து கட்டத்தை தாண்டியதாகவும், சுய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இளவரசர் சார்லஸ் கடந்த வாரம் முழுவதும் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் தோட்டத்தில் மனைவி கமிலாவுடன் தங்கியிருந்து அலுவல்களை கவனித்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் 10 ஆம் திகதி, மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் இளவரசர் சார்லஸ்.
ஆனால் 19 ஆம் திகதி மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் கொரோனா தொற்றுக்கு இலக்கானால் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.