உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனாவினால் உலக மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்த்துள்ளனர்.
சீனாவின் வுஹானில், ஆரம்பமான இந்த கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளுக்கும் பரவி மக்களை பலிவாங்கி கொண்டுள்ளது.
எனினும் கொடிய கொரானாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்களும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ளவர்கள் செவிலியர்கள் என லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.
“பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம், என்கிறார் மருத்துவர் .