இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக்கிரியைகள் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு நகர சபைக்கு உரிய பொது மயானத்தில் அவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இறுதிக்கிரியைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரதானிகள், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய இரண்டு உறவினர்கள் மாத்திரம் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியும் எனினும், அச்சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் யாரும் அங்கு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.