கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளத.
இன்று மட்டும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் அறிவிப்பினை விடுத்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று பூரண குணமடைந்துள்ளதுடன் மொத்தம் 16 பேர் நாடு முழுவதும் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.