பிரித்தானிய மக்கள் தொகையில் கால் பங்கு மக்கள் தற்போதும் அரசு அறிவித்துள்ள சமூக விலகலுக்கும் சுய தனிமைப்படுத்தலுக்கும் மறுப்பு தெரிவித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் சுமார் 2,000 இளைஞர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 27 சதவீதத்தினர் தற்போதும் அனைவருடனும் நெருக்கமாக பழகி வருவது தெரியவந்துள்ளது.
தாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பணியாளர்கள் என்ற காரணத்தை இதற்கு தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றே சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர்.
ஆனால் சமூக விலகலை பின்பற்றும் 14 சதவீத மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது குணமடைந்துள்ளதாகவும் நம்புகின்றனர்.