கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குருதி மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று அதன் முடிவுகள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் கடந்த மாதம் 2 ஆம் திகதியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரவுவரை 53 பேர் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
ஏனைய 44 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதணைகளின் முடிவின்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்தியசாலைக்கு வந்த 6 பேருடைய பரிசோதணை முடிவு அறிக்கை இன்று வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றது.
அந்த பரிசோதணை முடிவின்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இரவுவரை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுடைய இரத்த மாதிரிகளும் பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேருடைய பரிசோதணை முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை கிடைக்கப்பெறும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.