பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் சகோதரியை பறிகொடுத்த பெண் ஒருவர், இதை மக்கள் சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவின் New Marske பகுதியை சேர்ந்தவர் Caroline Saunby. 48 வயதான இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கடந்த 29-ஆம் திகதி James Cook University மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உடல் அளவில் எந்த ஒரு நோய் தொடர்பான பிரச்சனை இல்லாமல் இருந்த இவர் திடீரென்று கொரோனா வைரஸால் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உயிரிழந்த Caroline Saunby-க்கு Joseph மற்றும் Elliot என்ற 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் Vic என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சகோதரியை(இரட்டையர்கள்) பறிகொடுத்த Sarah Jarvis, இந்த வைரஸ் எங்களின் முழு குடும்பத்தையும் இப்போது பிரித்துவிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் எப்போதுமே மிக நெருக்கமான குடும்பமாக இருந்தோம். இப்போது இது எங்களை பிரித்துவிட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் திகதி வியாழக்கிழமை, வைரஸின் அறிகுறிகளை Caroline Saunby முதலில் கண்டார். இதில் தொண்டை வலி இருந்தது. அதன் பின் வெள்ளிக்கிழமை அவர் நோயின் மேலும் சில அறிகுறிகளை கண்டார். அதன் பின் ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.
இதனால் இது குறித்து உடனடியாக அவசர எண்ணிற்கு தெரிவிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் இரண்டும் அனுப்பப்பட்டன, அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு வீட்டில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டாள்.
ஆனால் மூன்று நாட்களில் உயிரிழந்துவிட்டாள்.
அவள் சமூக தூரத்தை கடைப்பிடித்தாள், அவள் கைகளை கழுவிக் கொண்டிருந்தாள், அவளையும் அனைவரின் பாதுகாப்பையும் தீவிரமாக எடுத்துக் கொண்டாள், ஆரோக்கியமாக இருந்தாள். இருப்பினும் அந்த வைரஸ் எங்களிடமிருந்து அவளை சில நாட்களில் பிரித்துவிட்டது.
இதனால் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை உணர வேண்டும். மக்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் அவர்கள் ஆபத்தில் இல்லை என்று நம்புகிறார்கள், ஆனால் கொரோனா வைரஸ் யாருடைய வாழ்க்கையையும் மாற்ற முடியும் என்பது தான் உண்மை.
என் சகோதரிக்கு வைரஸ் பாதிப்பு எங்கு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது யாருக்கும் தெரியாது. அவளுடைய மகன்கள், தங்கள் தாயை இழந்துவிட்டார்கள், எங்கள் பெற்றோர் ஒரு குழந்தையை இழந்துவிட்டார்கள், ஒருவருக்கொருவர் ஆறுதலளிக்க நாங்கள் ஒன்றாக இருக்க முடியாது என்பது இப்போது மிகவும் வேதனையாக உள்ளது.
அவளின் இறுதிச்சடங்கை கூட செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். தயவு செய்து மக்கள் இதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம், மிகவும் கவனமாக இருங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.