வயதானவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கபடுவர் என்பதே நமது நம்பிக்கையாக இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது என ஜீவன் தனது முகநுால் பக்கதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசுக்கு வயது வித்தியாசம் இல்லை.இரக்கமற்று அது பிஞ்சு குழந்தைகளையும் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றது
ஒரு சிறு குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அக் குழந்தையின் பெற்றோரால் பக்கத்திலிருந்து ஆறுதல் சொல்லவோ அல்லது அக் குழந்தையின் தலையை வருடிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் வாய்ப்போ பெற்றோருக்கு கிடைக்காது.
மருத்துவர்கள் மட்டுமே குழந்தையின் பக்கத்தில் போக முடியும். பெற்றோருக்கு எந்தவிதத்திலும் நெருங்க அனுமதியில்லை.
ஒருவேளை அந்தக் குழந்தை தூரதிஸ்டவசமாக உயிரிழந்தால் நீங்கள் அக் குழந்தையை வைத்திர்களிடம் ஒப்படைத்த நிமிடம் மட்டுமே நீங்கள் உங்கள் குழந்தையின் முகத்தை கடைசியாக பார்த்த கடைசி தருணமாக இருக்கும்.
மரணத்தின் பின் மூடிய உடலை தூரத்தில் இருந்தே பார்க்க முடியும். அருகில் செல்ல முடியாது. கட்டி கதற முடியாது. கடைசியாக முகத்தைக் கூட பார்க்க முடியாது.
இக் கருத்தை தொலைக் காட்சியில் பார்த்த போது இதயம் நின்று போனது. உலகமே வெறுத்துப் போனது. பலரை அறியாமலே கண்களில் நீர் வழிந்தது.
எனவே தயவு செய்து கொரோனா தொடர்பான அறிவுரைகளை முடிந்தளவு பின்பற்றுங்கள். மீண்டும் அப்படி ஒரு தருணம் யாருக்கும் வரக் கூடாது. உங்கள் குழந்தைச் செல்வங்களையாவது நினைத்து கட்டுப்பாடோடு வீட்டில் இருங்கள்.