பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 588 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500-க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருத்துவமனைகளில் மொத்தம் 588 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார இயக்குநர் Jérôme Salomon இன்று மாலை தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தொடக்கத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில், இது அதிகம் என்று தெரிவித்துள்ள அவர்,
நாட்டின் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடக்கத்திலிருந்து 1,416 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக் கிழமை வரை பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளின் இறப்புகளை அடிப்படையாக வைத்தே தெரிவிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று, தற்போது நாட்டில் இறந்தவர்களின் எண்ணிகை 6,500-க்கும் அதிகமாக உள்ளது.
தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையும் 263 அதிகரித்துள்ளது, வியாழக்கிழமை 6,399-ஆக இருந்த இதன் எண்ணிக்கை, இன்று(வெள்ளிக்கிழமை) 6,662 ஆக உயர்ந்துள்ளது.
இது புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தீவிர சிகிச்சை சேர்க்கைகளில் எண்ணிக்கை 382 ஆகவும், செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை 452 ஆகவும் உயர்ந்திருந்தது.
இதனால் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும்போது, அந்த வளர்ச்சியின் வீதம் இந்த வாரம் குறைந்துவிட்டதாக என்று Jérôme Salomon கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சை நோயாளிகளில்(6662 பேர்) 35 சதவீதம் பேர் 60 வயதிற்கும் குறைவானர்கள் எனவும்,
93 பேர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரே நேரத்தில் பிரான்சில் பல மோசமான நோயாளிகள் இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்பினால் வீட்டிலேயே இருங்கள் என்பதை Jérôme Salomon மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.