ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதை மீறினால் 440 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஜேர்மனியில் தற்போது வரை 89,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,208 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை மட்டும் நாட்டில் 6000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்
அதாவது, ஜேர்மனியர்கள் இன்று முதல் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக நின்றால்(புதிய விதிமுறை படி) 500 யூரோக்கள் (440 பவுண்ட்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மளிகை கடை, உடற்பயிற்சி அல்லது மருத்துவ நியமனங்கள் போன்ற விதிவிலக்கான காரணங்கள் இல்லாவிட்டால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் நிற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குறைந்தது 5 அடி (1.5 மீற்றர்) தூரத்தை மற்றவர்களிடமிருந்து மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. Berlin- நகர அதிகாரிகள் தங்களது அபராதம் 500 யூரோக்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
இது போன்ற அறிவிப்புகள் ஜேர்மனியின் 16 மாநிலங்களில் இருந்து வந்துள்ளன.
மாநிலமான Hesse-யின் Frankfurt மற்றும் வடக்கு Rhine-Westphalia ஆகிய இரு இடங்களுக்கும் சொந்தமான பகுதிகளில் குழுக்களில் கூடும் மக்களுக்கு 200 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
மிகப்பெரிய மாநிலமான Bavaria, கொரோனா வைரஸால் இதுவரை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதில் 18,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு, ஐந்து அடிக்கு குறைவாக நிற்கும் நபர்களுக்கு 150 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்களுக்கு வெளியே வெகு தொலைவில் நிற்கும் மக்களின் வரிசைகள் ஒரு பொதுவான காட்சியாக மாறியுள்ளதுடன், நடைபாதையில் மக்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதைக் குறிக்க பலர் டேப்பைக் கீழே ஒட்டியுள்ளனர்.
இருப்பினும், பலர் விதிமுறைகளை மீறியதாக ஜேர்மன் பொலிசார் அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.