உலகநாடுகளே இன்று அஞ்சுகின்ற விடயமாக கொடிய கொரோனா மாறியுள்ளது.
கடந்த டிசம்பரில் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸானது இன்று உலக மக்களையே ஆட்டிப்படைத்து நிற்கின்றது.
அந்தவகையில் இலங்கை மட்டும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல. நமது நாட்டிலும் நால்வைரை இந்த கொரோனா பலிவாங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் மக்களிற்கு தன்னார்வலர்கள் பலரும் உதவிவருகின்றனர்.
அந்தவகையில் இனவாதம் பேசி முஸ்லீம் மக்களிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட ஞானசாரதேரரையும் இந்த கொரோனா மாற்றியுள்ளது.
முஸ்லீம் மக்களிற்கு உதவும் நிலையை ஏற்படுத்தியுள்ளமை பலராலும் பாராட்டப் படுகிறது…